கொழும்பு ICBT Campus இல் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) கடமையாற்றும் Dr.Sampath Kannangara தனது தமிழ்ப் பெண் செயலாளரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சம்பவம் போலீசில் பதிவாகியுள்ளது.
மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 10/02/2021 அன்று பம்பலப்பிட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண் செயலாளர் புகார் கொடுத்துள்ளார்.
(WCIB /239/33)
மேலும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women & Child Bureau, Sri Lanka) முறைப்பாடு செய்துள்ளார்.
இப்புகார் குறித்து பம்பலப்பிட்டி போலீசார் விசாரித்து வருவதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதான நிறைவேற்று அதிகாரியோ (CEO) இன்னும் விசாரிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
http://www.lankapost.com/icbt-campus-ceo-sexually-assaults-the-secretary/
இது கொழும்பு ICBT Campus இல் நடந்த இரண்டாவது பாலியல் துஷ்பிரயோக சம்பவமாகும். ஏற்கனவே 2017ல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ்ப் பெண் செயலாளரை, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தற்போது வழக்கு விசாரணை Colombo Magistrate Court III இல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
2017 இல் இடம்பெற்ற சம்பவம்
ICBT Campus நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அனுர கமகே (Director Marketing) 2017 இல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ் பெண் செயலாளரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து அப்பெண் செயலாளரின் உடனடி புகாரை அடுத்து பம்பலபிட்டிய போலீஸினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அனுர கமகே கைது செய்யப்பட்டு தற்போது Colombo Majestrate Courts III இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு (வழக்கு இலக்கம் B/81339) நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்திருக்கும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் Anura Gamage எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் ICBT Campus இனால் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் ICBT Campus இல் கடைமை செய்ய அனுமதித்திருப்பது நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) என்கிற வகையில் அங்கு கல்வி பயிலும் பெண் மாணவர்களுக்கு மேலும் அச்சுறுத்தலும் ICBT Campus இன் பெயருக்கும் இழுக்காகும் என குறித்த பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.